10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு யூடியூப் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது
கல்விச் சேனல் மற்றும் அதன் யூட்டியூப் தளத்தின் மூலம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்ச் 27ஆம் தேதி தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. .
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன், இணையவழி மற்றும் கல்விச் சேனல் மூலம் பொதுத்தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுவதாகக் கூறினார்.
Comments