மின்வழங்கல் நிறுவனங்கள் 3மாதத்துக்குப் பின் தொகையைச் செலுத்தலாம்

0 2003

பொதுத்துறை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு மின் வழங்கல் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை 3 மாதங்களுக்குப் பின்னர் செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் மருத்துவமனைகளுக்கும், இன்றியமையாப் பணிகளுக்கும் பொதுமக்களுக்கும் தடையின்றி மின்சாரம் கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன் ஒருபகுதியாக மின் வழங்கல் நிறுவனங்கள், பொதுத்துறை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை 3 மாதங்களுக்குப் பின் செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலுவைத் தொகையைச் செலுத்தாததைக் காரணங்காட்டி மின் வழங்கல் நிறுவனங்களுக்கு வழங்கும் மின்சாரத்தின் அளவைக் குறைக்கக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

விதிகளின்படி நிலுவைத் தொகையைச் செலுத்தாத மின்வழங்கல் நிறுவனத்துக்கு மின்சாரத்தின் அளவைப் பாதியாகக் குறைப்பது வழக்கமாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments