144 தடை உத்தரவை மீறியதற்காக ஒரே நாளில் 278 வழக்குகள் பதிவு

0 1620

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் தனிமைபடுத்தப்பட்ட நபர்கள் விதிகளை மீறியதற்காக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 120 இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள், 1 கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக ஆயிரத்து 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 5 வழக்குகளையும், தலைக்கவசம் அணியாதது தொடர்பாக 780 வழக்குகளையும் பதிவு செய்துள்ள போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபட்ட இருசக்கரவாகனங்கள், ஆட்டோக்கள் உட்பட மொத்தம் 640 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments