பட்டினியில் வாடும் ஓலா குடும்பங்களுக்கு நிதியுதவித் திட்டம்
கொரோனா தொற்றின் எதிரொலியாக வேலையில்லாமல் பட்டினியில் வாடும் ஒலா கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதியுதவி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் இறங்கி உள்ளது.
இதற்காக Drive the Driver Fund என்ற செயலி வாயிலாக பொதுமக்களிடம் இருந்து 50 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிதிக்கு ஓலா நிறுவனம் சார்பில் 20 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றும் தமது ஓராண்டு சம்பளத்தையும் அதற்கு நன்கொடையாக வழங்கப் போவதாகவும் ஓலா தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான ஓலா டிரைவர்களின் குடும்பங்களுக்கு அவசரகால உதவி, அத்தியாவசி பொருள்கள் உள்ளிட்ட வழங்கப்படுவதுடன், இலவச மருத்துவ வசதிகளும் அளிக்கப்படும் என ஓலா தெரிவித்துள்ளது.
டிரைவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் மாத வாடகையை தள்ளுபடி செய்து விட்டதாக ஓலா ஏற்கனவே அறிவித்துள்ளது.
Comments