சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர்கள் கைது

0 2238

சென்னையில் சானிடைசர்கள், முகக்கவசங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 1500க்கும் மேற்பட்ட சானிடைசர் பாட்டில்களும், முகக்கவசங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கோடம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், முகமது நிஜாம் ஆகியோர், 144 தடை உத்தரவு அமலாவதற்கு முன்பே மொத்தமாக சானிடைசர்கள், முகக்கவசங்களை வாங்கி வைத்து, பின்னர் வாட்ஸப் குழு மூலம் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

100 மில்லி சானிடைசர் பாட்டிலை 250 ரூபாய்க்கும், முகக்கவசங்களை 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்துள்ளனர்.

தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த சானிடைசர், முகக்கவசங்களையும் பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments