கொரோனா பாதிப்பைக் கண்டறியும் கருவிகளை வழங்க முன்வந்த ஹுண்டாய்

0 2322

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய உதவும் கருவிகளைத் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஹுண்டாய் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் கார் தயாரிப்புத் தொழிலை நடத்தி வரும் ஹுண்டாய், சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் சோதனைக்குத் தேவையான கருவிகளைத் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

பாதிப்பை மிகத் துல்லியமாகக் கண்டறிய உதவும் இந்தக் கருவிகள் மூலம் 25 ஆயிரம் பேருக்குச் சோதனை நடத்த முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டபின் அவற்றை எந்தெந்த மருத்துவமனைகளுக்கு வழங்குவது என்பதை மத்திய மாநில அரசுகளுடன் கலந்துபேச உள்ளதாகவும் ஹுண்டாய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments