வெளியூரை சேர்ந்தவரை உள்ளே வராதீர்கள்..மரக்கிளை,கற்களை சாலைகளில் போட்டு மக்கள் எச்சரிக்கை

0 4809

கர்நாடகத்தின் சிவமோகா மாவட்டத்தில் சில ஊர்களில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் நுழைய முடியாத வகையில், சாலைகளில் மரக்கிளைகள், கற்களைப் போட்டுத் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்கவும், இன்றியமையாத் தேவைகளுக்கு அல்லாமல் வேறு எதற்காகவும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்நிலையில் கர்நாடகத்தின் சிவமோகா மாவட்டத்தில் சாகரா வட்டத்தில் உள்ள பல ஊர்களில் வெளியார் தங்கள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காகச் சாலையில் மரக்கிளைகளை வெட்டிப்போட்டும் கற்கள் முட்களைப் பரப்பியும் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இது மிகவும் பாதுகாப்பான ஏற்பாடு எனக் கருதினாலும் நலவாழ்வுத்துறைப் பணியாளர்களும், அரசு அலுவலர்களும், இன்றியமையாப் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களும் ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments