கொரோனா வைரசை பரப்ப பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த பொறியாளர் கைது - பணியில் இருந்து நீக்கி இன்போசிஸ் நிறுவனம் உத்தரவு
பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரப்புதலை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவு போட்டதாக பொறியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியில் இருந்து நீக்கி இன்போசிஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
முஜீப் முகமது என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் "வெளியில் சென்று பொது இடத்தில் தும்முங்கள், வைரஸை பரப்புங்கள்" என கொரோனாவை பரப்ப மக்களுக்கு அழைப்பு விடுத்து கருத்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், சமூக பொறுப்பிற்கான உறுதிபாட்டையும், நடத்தை விதிகளையும் மீறியதாக மூத்த பொறியாளரான முஜீப்பை, பணியில் இருந்து நீக்குவதாக இன்ஸ்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
The social media post by the employee is against Infosys’ code of conduct and its commitment to responsible social sharing. Infosys has a zero tolerance policy towards such acts and has accordingly, terminated the services of the employee. (2/2)
— Infosys (@Infosys) March 27, 2020
Comments