இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் கொரோனா நிதி - அமெரிக்கா
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா 100 மில்லியன் டாலர்கள் கொரோனா நிதியுதவியை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டுள்ள 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் 2.9 மில்லியன் டாலர் தொகை இந்தியாவுக்கு வழங்கப்படுகிறது. ஆய்வக வசதிகளை ஏற்படுத்தவும், கொரோனா பாதிப்புள்ளவர்களை கண்டறியவும், தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்டவற்றிற்காகவும் இந்த தொகை வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா இந்தியாவுக்கு 2.8 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளதாகவும், அதில் சுகாதாரத்துறை சார்ந்து மட்டும் 1.4 பில்லியன் டாலர்கள் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
Comments