கால்நடையாகவே டெல்லியை விட்டு வெளியேறிச் சென்ற வெளிமாநிலத் தொழிலாளர்கள்
டெல்லியில் பணியாற்றிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்தும் பேருந்துகளைப் பிடித்தும் சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி, அரியானா, நொய்டா, காசியாபாத் ஆகிய பகுதிகளில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர். கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்துள்ளனர். வருமானம் இல்லாததால் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றுத் தொழிலாளர்கள் பலர் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மனைவி குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கால்நடையாகவே நடந்து டெல்லியை விட்டு வெளியேறினர்.
புறநகர்ப் பகுதியான காசியாபாத்துக்கு வந்து அங்கிருந்து தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்திப் பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டனர்.
Comments