சரக்கு ரயில்களை இயக்கும் ரயில்வே துறை

0 1439

இன்றியமையாப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பதற்காகச் சரக்கு ரயில்களை ரயில்வே துறை இயக்கி வருகிறது.

அவற்றைக் கொண்டுசெல்ல எந்தத் தடையுமில்லை என அறிவிக்கப்பட்டு இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் காவல்துறையினரின் கெடுபிடியால் தேசிய நெடுஞ்சாலைகளில் 2 லட்சம் சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆராய்ச்சிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றியமையாப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைக்கச் செய்வதற்காக ரயில்வே துறை, சரக்கு ஏற்றும் நிலையங்களிலும், கட்டுப்பாட்டு அறைகளிலும் 24 மணி நேரமும் அலுவலர்களைப் பணியமர்த்தியுள்ளது. கடந்த 4 நாட்களில் ஒரு லட்சத்து 60ஆயிரம் வேகன்களில் சரக்குகள் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments