வரும் 29 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு கட்டுப்பாடு !
மளிகை கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்
மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை
பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்
மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் எப்போதும் போல் செயல்படும்
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி
ஸ்விக்கி, ஜொமட்டோ போன்ற நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்ய நேரக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
காலை 7 - 9.30 மணி வரை சிற்றுண்டி, மதியம் 12 - 2.30 மதிய உணவு, மாலை 6 - இரவு 9 மணி வரை உணவு டெலிவரிக்கு அனுமதி
ஆதரவற்றோருக்கு சமைத்த உணவை வழங்க விரும்பும் நபர்கள் நேரடியாக வழங்க கூடாது
சமைக்க விரும்பும் உணவுப் பொருட்களை சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வழங்கலாம்
இந்த உத்தரவுகள் வரும் 29 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் அமலுக்கு வருகிறது
பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு வெளிநாடு சென்று திரும்பியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
சொந்த ஊர் திரும்ப முடியாமல் இருக்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களே ஏற்பாடு செய்ய வேண்டும்
கோயம்பேடு காய்கறி, பழ சந்தையில் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும்
கோயம்பேடு காய்கறி அங்காடி, பிற காய்கறி விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்
Comments