கொரோனா பாதிப்புக்கு 500 படுக்கை வசதியுடன் தனித்தனியாக சிகிச்சை அளிக்க வசதி

0 1650

சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் 7 மாடி கட்டிடத்தில் 500 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனை தயாராகி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அறிகுறி இருப்பவர்கள் என தனித்தனியே தங்கி சிகிச்சை பெற  வசதி உள்ளது.

இங்கு செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை மாலையில் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த  உரிய  நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு, மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சருடன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதன்பின்னர், சென்னை - தேனாம்பேட்டை டி. எம். எஸ் வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments