இந்தியாவில் ஊரடங்கால் வெகுவாகக் குறைந்த மின் நுகர்வு !

0 1877

ஊரடங்கால் இந்தியாவில் மின் நுகர்வு கடந்த 5 மாதங்களில் குறைந்தபட்ச அளவாக பதிவாகியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட முதல் நாளான கடந்த 25-ஆம் தேதி இந்திய அளவில் மின் நுகர்வு 278 கோடி  யூனிட்டுகளாக இருந்ததாக மத்திய அரசு அரசு புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மார்ச் மாதத்தின் முதல் மூன்று வார சராசரி மின் நுகர்வான 345 கோடி யூனிட்டை விட 20 சதவீதம் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பெரும்பாலான் தொழிற்சாலைகள் இயங்காத நிலையில் மின் நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் சில விசைத் தறியாளர்கள் இரவு நேரங்களில் இயந்திரங்களை இயக்கியதாலும், ஏ.சி., மின் விசிறி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாலும் அங்கு மின் நுகர்வு அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments