இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரையும் கண்காணிக்க வேண்டும்

0 1595

சர்வதேச விமான சேவை நிறுத்தப்படும் வரை இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரையும் கொரோனா கண்காணிப்பில் வைக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகி விடும் என மத்திய கேபினட் செயலர் ராஜீவ் கவுபா  மாநில அரசுகளை எச்சரித்துள்ளார்.

அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,இந்தியாவில் கொரோனா உறுதியானவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடியேற்றப்பிரிவு 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கும் நிலையில், மாநில அரசுகள் காட்டும் கணக்குகள் அதை விடவும் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், விடுபட்டவர்களை உடனே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments