10 மாதக் குழந்தைக்குக் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு

0 10548

கர்நாடகத்தில் 10 மாதக் குழந்தைக்குக் கொரோனா தொற்று இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தெற்குக் கன்னட மாவட்டத்தில் சஜிப்பநாடு என்னும் ஊரில் 10 மாதக் குழந்தைக்குக் காய்ச்சலும் மூக்கடைப்பும் இருந்துள்ளது. இதையடுத்து அந்தக் குழந்தையின் சளியைப் பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதித்திருப்பது தெரியவந்தது.

பெற்றோர், குழந்தையுடன் கேரளத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது கொரோனா பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்துக் குழந்தையுடன் தொடர்புள்ள 6 பேர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சஜிப்பநாடு ஊர்  மக்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments