கொரோனா பரவலை சரிசெய்ய சாய்பாபா கோவில் ரூ. 51 கோடி நன்கொடை
மகாராஷ்டிர மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டணை 51 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்ய நன்கொடை வழங்குபவர்களுக்கு வருமான வரிச்சட்டம் 80 ஜியின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை சார்பில் 51 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோசியாரி ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஆளுநர் மாளிகை அதிகாரிகளும், ஊழியர்களும் ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இதேபோல சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாயும், மகாராஷ்டிர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாயும் நன்கொடை வழங்கியுள்ளார்.
Comments