சுய தனிமைப்படுத்தல் சிறைவாசம் அல்ல..!
சுய தனிமைப்படுத்தல் சிறைவாசம் அல்ல என்றும் கொரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மூலம் அவர் மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வர உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார். கனவில் கூட காண முடியாத சவாலான நிலையை எதிர்கொண்டு இருக்கிறோம் என்றும் அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று போல நாளைய சூழலும் அச்சமூட்டும் வகையில் மாற வாய்ப்பு உள்ளதாகவும் அனைவரும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துகொள்ளும் பணியில் இறங்க வேண்டும் என்றும் ஏ.பி.சாஹி அறிவுறுத்தியுள்ளார்.
சமூக இடைவெளியை போதிப்பதோடு நிறுத்தாமல், அனைவரும் உண்மையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அது கடினமானதாக இருந்தாலும், மற்றவர்களின் நலனுக்காக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் விடியும் பொழுது நமக்கு வெற்றி தருவதாக அமையட்டும் என்றும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.
Comments