தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறிய 3,800 பேர் கைது

0 1979

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதற்காக 3,800 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 4,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையை  மீறுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், சென்னையில் அநாவசியமாக சுற்றித்திரிந்த 425 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. மேலும்,156 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதேபோன்று தமிழகம் முழுவதும் தேவையில்லாமல் உலா வந்த 1,924 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் 84 ஆயிரம் ரூபாய் வரை அபராத தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 3,800 பேரும் காவல் நிலைய ஜாமீனில் பின்னர் விடுவிக்கப்பட்டனர். கொடிய நோய் தொற்று பரவும் சூழலில், பொறுப்பு இல்லாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments