கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் உதவலாம் -முதலமைச்சர் வேண்டுகோள்

0 4274

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக மனமுவந்து நன்கொடை அளிக்குமாறு, தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(ஜி)-ன் கீழ், 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கும் அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 லட்ச ரூபாய்க்கு மேல் நிதியுதவி அளிக்கு நபர்கள் அல்லது நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நெட் பேங்கிங், டெபிட் (அ) கிரடிட் கார்டு மூலம் அரசின் இணையதளத்தில் நன்கொடை அனுப்பலாம் என்றும், அல்லது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயலக கிளைக்கு நேரடியாக இசிஎஸ் முறையில் நன்கொடையை அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

#Corona தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு. pic.twitter.com/qFQ2rS3i4M

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 27, 2020 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments