வீட்டில் இருந்தே தொலைபேசியில் ஆர்டர் செய்து பொருட்களை பெற்றுக் கொள்ள வசதி

0 1811

ஆவடி மாநகராட்சி பகுதியில், காய்கறி சந்தை மற்றும் கடைகளில் கொரோனா பரவலை தடுப்பு முன்னெச்சரிக்கையாக மக்கள் கூடுவதை தவிர்க்க, பொதுமக்கள் தொலைபேசியில் ஆர்டர் செய்து பொருட்களை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கோயில்பதாகை, கலைஞர் நகர், திருமுல்லைவாயல், பூம்பொழில், சாந்தி நகர்,  செந்தில் நகர், காமராஜ் நகர், சேக்காடு, தண்டுரை, பட்டாபிராம், அண்ணனூர், வைஷ்ணவி நகர், ஜெயலட்சுமி நகர் பகுதிகளில் உள்ள தனியார் அங்காடிகளின் தொலைபேசி எண்கள் துண்டு பிரசுரம் மூலம் வீடு வீடாக  மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தங்கள் பகுதி அங்காடியின் தொலைபேசி எண்னுடன் தொடர்பு கொண்டு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால், உரிய விலையில் வீட்டுக்கே வந்து கடைக்காரர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments