வூகானில் 6 முக்கிய சுரங்க பாதைகள் ரயில் போக்குவரத்துக்கு நாளை திறப்பு

0 1777

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து வூகானில் உள்ள 6 முக்கிய சுரங்க பாதைகளை ரயில் போக்குவரத்துக்கு சீனா நாளை (28.3) திறக்கவுள்ளது.

ஹூபே மாகாணம் வூகானில் உருவான கொரோனா பரவுவதைத் தடுக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது 6 முக்கிய சுரங்க ரயில் பாதைகளை மூடிய சீனா, கடந்த 2 மாதங்களாக தூய்மை பணியை மேற்கொண்டது.

தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதால், ஹூபே முழுவதும் பயண கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வூகானில் 6 முக்கிய சுரங்க பாதைகளை நாளை சீனா திறக்கவுள்ளது.

பயணிகள் மூலம் கொரோனா பரவாமல் தடுக்க ரயில்நிலைய நுழைவு பகுதியில் இன்பிராரெட் டெம்பரேசர் சென்சிங் சாதனங்கள் (Infrared temperature sensing systems) பொருத்தப்பட்டுள்ளன. பச்சை நிற க்யூ ஆர் கோட் (Gree colour QR code) கிடைத்த பிறகே பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments