300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் பயணம்
கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற அரசு வலியுறுத்தி வரும் நிலையில், 300-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெய்னர் லாரியில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது.
மகராஷ்டிரா மாநிலம் பந்தர்கவ்டா (Pandharkavda) சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவ்வழியாக வந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர்.
லாரி ஓட்டுநர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்தனர். அதில், 300-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தொழிலாளர்கள் அனைவரும் தெலங்கானா மாநில எல்லையில் உள்ள யாவத்மால் (Yavatmal) மாவட்டத்தில் இருந்து தங்களது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Comments