கான்டாக்ட் லென்ஸ்களை அணிவோருக்கு கொரோனா பரவ வாய்ப்பு

0 2842

கான்டாக்ட் லென்ஸ்களை கண்களில் அணிந்திருப்போருக்கு கொரோனா பரவ வாய்ப்பிருப்பதால், அதை கழற்றி வைத்துவிட்டு கண்ணாடிகளை அணியும்படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கண்ணாடி அணிவதை சிரமமாக கருதி, கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கன் அகாடமி ஆப் ஆப்தால்மோலாஜி (American Academy of Ophthalmology) எனும் அமைப்பை சேர்ந்த நிபுணர்கள், கான்டாக்ட் லென்ஸ்களை அணியவும், அதை கழற்றவும் கண்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தொட வேண்டியிருக்கும் எனவும், கை கழுவ மறந்து, அவ்வாறு கண்களை தொட நேரிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா பரவும் வாய்ப்பிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆதலால் கான்டாக்ட் லென்ஸ்களை கழற்றி வைத்துவிட்டு, கண்ணாடிகளை அணியும்படி கூறியுள்ள அவர்கள், இதனால் கொரோனா பரவாமல் தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments