சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் மீது வேண்டுமென்றே இருமிய பெண் கைது
சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து அங்கிருந்த பொருட்கள் மீது இருமிய பெண்ணை போலீசார் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அங்கிருந்த இறைச்சி, பேக்கரி உணவு வகைகள் உள்ளிட்ட பொருள்கள் மீது வேண்டும் என்றே இருமிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண்ணுக்கு கொரோனா இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் சுமார் 35 ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருள்களை குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விட்டதாக சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் Joe Fasula டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஹனோவர் நகரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
கைது செய்யப்பட்ட பெண் திட்டமிட்டே இந்த செயலை நடத்தியதாக தெரிவித்த ஹனோவர் போலீசார், அவருக்கு மனநல பாதிப்பு இருக்கிறதா என்ற சோதனை நடந்து முடிந்த பின் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
குறிப்பிட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் எனினும் அவருக்குஅது தொடர்பான அனைத்து சோதனைகளும் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.
Comments