பத்தே நாளில் கொரோனா சிகிச்சைக்கு புதுவகையான வென்டிலேட்டர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்த ஆர்டரின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கான 10 ஆயிரம் பிரத்யேக வென்டிலேட்டர்களை பிரபல பிரிட்டன் நிறுவனமான டைசன் தயாரிக்கிறது.
இவை அடுத்த மாத துவக்கத்தில் தயாராகி விடும் என டைசன் நிறுவன தலைவர் ஜேம்ஸ் டைசன் தெரிவித்துள்ளார். CoVent என இந்த வென்டிலேட்டருக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வென்டிலேட்டர் குறித்து தமது பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சொந்தமாக சுவாசிக்க இயலாத நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள டைசன், ஆனால் பிரிட்டனிலும், இதர உலக நாடுகளிலும் அதற்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
5 ஆயிரம் CoVent வென்டிலேட்டர்கள் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
Comments