உலக அளவில் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா தொற்று நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தையும், பாதித்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
உலக நாடுகளில் கோர தாண்டவம் ஆடிவரும் கொரோனா தொற்று நோய்க்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மேலும் 5 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் அமெரிக்காவில் மேலும் 5 பேரும், தென்கொரியாவில் 8 பேரும், மெக்சிகோவில் 2 பேரும், நிகரகுவாவில் ஒருவரும் மரணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து, உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகில் இத்தாலி நாட்டில்தான் மிகவும் அதிகபட்சமாக 8 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதற்கடுத்து ஸ்பெயினில் 4 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோரும், சீனாவில் 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோரும், ஈரானில் 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோரும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளில் இன்று புதிதாக சுமார் 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் உலகில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலக அளவில் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ள நிலையில், அதற்கடுத்து 2 ஆவது இடத்தில் சீனாவும், 3 முதல் 5 வரையிலான இடங்களை இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளும் உள்ளன.
சீனாவில் மேலும் சுமார் 81 ஆயிரத்து 300 பேரும், இத்தாலியில் 80 ஆயிரத்து 500 பேரும், ஸ்பெயினில் 57 ஆயிரத்து 800 பேரும், ஜெர்மனியில் 44 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதித்தோரில் 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமடைந்து விட்டதாகவும், 3 லட்சத்து 83 ஆயிரம் பேர் தொடர் சிகிச்சை பெறுவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
சிகிச்சை பெறுவோரில் 19 ஆயிரத்து 600 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை பெறுவோரில் 19 ஆயிரத்து 600 பேர் நிலை கவலைக்கிடம்.
Comments