மெக்சிக்கோவில் புதிதாக பிறந்த புலிக்குட்டிக்கு ”கோவிட்” என்று பெயரிட்ட சரணாலயம்

0 1149

மெக்சிகோவில் புலிக்குட்டி ஒன்றுக்கு கோவிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. கோர்டோபா நகரில்(Cordoba) உள்ள சிறிய தனியார் வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 14 ஆம் தேதி வங்காள புலிக்குட்டி பிறந்தது.

முதுகெலும்பு உடைந்த நிலையில் சர்க்கஸ் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 8 வயது தாய் புலிக்கும் வாயில் காயத்துடன் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட 6 வயது தந்தை புலிக்கும் பிறந்த குட்டிக்கு கோவிட் என பெயரிடப்பட்டுள்ளது.

இது, கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தங்களது வாழ்வாதாரத்துக்கு புது நம்பிக்கை அளிப்பதாக சரணாலயத்தை நடத்துபவரின் மகளும் மருத்துவருமான கிட்ஸியா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments