ஊரடங்கால் 160 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செய்தே சொந்த ஊர் அடைந்த தொழிலாளர்கள்

0 7151

பீகாரைச் சேர்ந்த 27 தொழிலாளர்கள் வேலையில்லாத ஊரடங்கு காலத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் இருந்து 160 கிலோமீட்டர் தூரம் உள்ள ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா வரை நடைபயணம் மேற்கொண்டனர்.

மார்ச் 23ம் தேதி பயணத்தைத் தொடங்கிய அவர்கள் புருதுவான் வரை ஏதோ ஒரு வாகனத்தை பிடித்து அதன் பின் எந்த போக்குவரத்தும் இல்லாத நிலையில் நடந்தே வந்து நேற்று தும்காவை அடைந்தனர்.

மேலும் நடந்து சென்று கங்கை ஆற்றையும் கடந்து சஹரசா மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அவர்களை செல்ல அனுமதிக்காத அதிகாரிகள் தும்காவில் உள்ள அடைக்கல விடுதியில் தங்க வைத்துள்ளனர். அனைவருக்கும் அங்கு உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments