சமூக விலகலை கடைபிடிக்க மக்களிடம் வலியுறுத்தல்
21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் சமூக ரீதியாக விலகியிருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சக செயலர் ராஜீவ் கவுபா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் கலந்துக் கொண்டனர். உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவாத்சவா மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்களும் சேவைகளும் தடையின்றி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
கடைகளில் கூட்டமாக திரள வேண்டாம் என்று மக்களிடம் வலியுறுத்தவும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், சட்டத்தை மீறுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் சில இடங்களில் கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
Comments