ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் இன்று காணொலி மூலம் ஆலோசனை

0 1029

அனைத்து மாநில ஆளுநர்களுடனும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வீடியோ காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை சேவையில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலித் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு உணவு வழங்க பல்வேறு தொண்டுநிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட இந்த ஆலோசனை நடைபெறுகிறது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் காணொலி மூலம் இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments