வங்கிகள் 60-70 சதவீத கிளைகளுடன் செயல்பட திட்டம்
கொரோனா பரவிவரும் நிலையில், வங்கிகள் தங்கள் கிளைகளின் செயல்பாட்டை சுருக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளன. குறைந்த அளவிலான வங்கிக் கிளைகள் குறைந்த ஊழியர்களுடன் செயல்படுவது என திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வங்கிகளின் சங்கம் எழுதிய கடித்ததில் கிளை வங்கிகள், உள்ளூர் அரசு நிர்வாகிகளுடன் ஆலோசித்து கிளைகளை திறப்பது குறித்து முடிவெடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி 60 முதல் 70 சதவீத வங்கிக்கிளைகள் மட்டும் செயல்பட உள்ளன.
அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளில் எந்த வித குறைபாடும் ஏற்படாமல் இருக்கவும் கவனம் செலுத்தப்படுகிறது. முக்கிய நகரங்களில் ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் திறந்திருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments