சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்ததால் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு
சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தும், மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு வருகின்றன.
பிங்காயோ பண்டைய நகரம், புத்தர்களின் புனித தலமாக கருதப்படும் வுடாய் மலை, உலகின் எட்டாவது அதிசயம் என்று புகழப்படும் முதல் கின் பேரரசரின் கல்லறை, பாண்டா ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் டிக்கெட்டுகள் பெற வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்ல வேண்டும், பாதுகாப்பு கவசங்கள்அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
Comments