போலீசார் தொந்தரவு செய்வதால், பொருள்கள் வீணாகி வருவதாக ஆன்லைன் நிறுவனங்கள் வேதனை

0 1788

மளிகை பொருட்கள், மருந்துகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஹோம் டெலிவரி செய்யும் பணியாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தொந்தரவு செய்வதால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் வீணாகி வருவதாக ஆன்-லைன் விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த வகையில் சுமார் 15 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் 10 ஆயிரம் கிலோ காய்கறிகள் குப்பைத் தொட்டிக்கு போனதாக கூறியுள்ள அவர்கள், அரசு அவசரமாக தலையிட்டு தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்களது பணியாளர்களை, போலீசார் அவமதித்து, அடித்து விரட்டுவதுடன், ஒருவரை கைதும் செய்து விட்டதாக பிக் பாஸ்கெட், ஃபிரெஷ் மெனு, போர்டீ மெடிக்கல் (BigBasket, FreshMenu, Portea Medical) Grofers, FreshToHome ஆகியன புகார் தெரிவித்துள்ளன. இந்த அத்தியாவசிய சேவைகளுக்கு அரசு விலக்கு அளித்துள்ள போதிலும் களத்தில் இருக்கும் காவலர்களை அது சென்றடையவில்லை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments