கொரோனா தொற்று உறுதியான பின்னரும் வெளியே சுற்றிய 2 பேர் மீது வழக்கு பதிவு
கொரோனாவுடன் வெளியே சுற்றிய 2 பேர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அதிர்ச்சி அளித்த போலீஸ்
தென் ஆப்பிரிக்காவில், கொரோனா தொற்று உறுதியான பின்னரும் தனிமையில் இருக்காமல் தொடர்ந்து வெளியே சுற்றிய 2 பேர் மீது போலீசார் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.
இதில் முதலாவது நபர் லேடிஸ்மித் என்ற ஊரில் சலூன் கடை நடத்தி வருகிறார். 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி சுற்றித் திரிந்த அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் அடைத்தனர்.
மற்ற நபர் குரூகெர் உயிரியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப்பயணி ஆவார். கொரோனா தொற்று உறுதியான பின்னரும், ஹோட்டலை விட்டு வெளியே வந்து பலருடன் கலந்து பழகியதால் கைது செய்யப்பட்டதாக தென் ஆப்பிரிக்க காவல்துறை செய்தித் தொடர்பாளர் விஷ் நாயுடு தெரிவித்தார்.
Comments