கொரோனா: வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டோரை கண்காணிக்க செயலி
கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்க உதவும் செயலியை உருவாக்க தமிழக அரசுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி. அரவிந்தன் உதவி செய்துள்ளார்.
கணினி அறிவியல் பொறியியல் (computer science engineering gratuade ) பட்டதாரியான அவர், வீடுகளில் தனிமைபடுத்தப்பட்ட மக்களுக்கும் அரசுக்கும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் கோ பட்டி ((co -buddy)) செயலியை உருவாக்க உதவி செய்துள்ளார்.
அந்த செயலியில் குறுந்தகவல் கிடைக்கபட்டதும் தனிமையில் இருப்போர், உடனடியாக செல்பி எடுத்து பதிவிட வேண்டும். செல்பி படத்தையும் ஏற்கெனவே எடுக்கப்பட்ட படத்தையும் ஒப்பிட்டு தனிமையில் இருக்கிறாரா என காவல்துறை உறுதி செய்யும்.
இல்லையெனில் அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் இருக்கிறாரா என்பது பரிசோதிக்கப்படும்.
Comments