மருத்துவ ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 1 கோடி முகமூடிகள் நன்கொடை

0 4012

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களுக்கு 1 கோடி முகமூடிகளை நன்கொடையாக ஆப்பிள் நிறுவனம் அளித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதுடன், சுமார் 69 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஆதலால் கொரோனா பரவாமல் தடுப்பு பணிகளில் அமெரிக்கா முழுவதும் லட்சகணக்கான மருத்துவ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்காக 1 கோடி முகமூடிகளை கொள்முதல் செய்து நன்கொடையாக ஆப்பிள் அளித்திருப்பதாக அதன் தலைமை செயலதிகாரி(CEO) டிம் குக் (Tim Cook) தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments