இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறவில்லை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதில் 4 கட்டங்கள் உள்ளன.
முதல் கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமும், இரண்டாவது கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்களால் உள்நாட்டிலும் பரவுகிறது. மூன்றாவது கட்டம்தான் சமூகத் தொற்று கட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த கட்டத்தில் யாரிடமிருந்து தொற்றியது என தெரியாமல் உள்ளூர் அளவில் வைரஸ் பரவும். நான்காவது கட்டம் என்பது நாடு முழுவதும் பரவலாக வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையைக் குறிக்கும். இதில் இந்தியா மூன்றாவது கட்டத்தை எட்டிவிட்டதா இல்லையா என்பதில் சர்ச்சை நிலவுகிறது. ஆனால் கொரோனா சமூகத்தொற்றாக மாறிவிட்டது என்பதற்கு இதுவரை ஆதாரமில்லை என சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆங்காங்கே ரேண்டமாக எடுத்த 2 ஆயிரம் மாதிரிகளின் அடிப்படையில் மத்திய அரசு இதைத் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய ஊரடங்கால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Comments