துபாயில் இருந்து திரும்பிய இளைஞருக்கு கொரோனா உறுதி

0 2590

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இளைஞர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தனிவார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த 26 இளைஞரான அவர், துபாய்க்கு அண்மையில் சென்று வந்திருந்தார். அவரின் ரத்த மாதிரி உள்ளிட்டவை சோதிக்கப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து வாலாஜாபேட்டையிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிவார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் 2 பேர், கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 135 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments