ரூ.50 லட்சம் மதிப்புடைய அரிசி மூட்டைகளை அளிக்கும் கங்குலி

0 6126

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய அரிசி மூட்டைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நன்கொடையாக அளிக்கவுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், மேற்குவங்கத்தில் வீடுகள் இல்லாத மக்கள் லட்சகணக்கானோர் அரசு பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் 50 லட்சம் லட்சம் ரூபாய் மதிப்புடைய அரசி மூட்டைகளை தனியார் நிறுவன மூலம் நன்கொடையாக கங்குலி அளிக்க இருப்பதாக மேற்குவங்க மாநில கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments