சீசன்தோறும் பரவக்கூடியதாக கொரோனா வைரஸ் மாறலாம் -விஞ்ஞானிகள் எச்சரிக்கை

0 4567

குறிப்பிட்ட சீசன்தோறும் பரவக்கூடியதாக கொரோனா வைரஸ் மாறலாம் என்பதால், தடுப்பு மருந்தையும், எதிர்ப்பு மருந்தையும் விரைந்து கண்டறிய வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் தென்கோளார்த்தத்தில் குளிர்காலத்தில் வேரூன்றிய வைரஸ் பாதிப்பு, குளிர்காலத்தை கடந்து செல்லும், குளிர்காலத்தை எதிர்நோக்கும் நாடுகளில் அதிகரித்திருப்பதாக, அமெரிக்க தேசிய சுகாதார ஆய்வு நிறுவனத்தில் தொற்றுநோயியல் ஆய்வுகளுக்கு தலைமை தாங்கும் விஞ்ஞானி Anthony Fauci தெரிவித்துள்ளார்.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி விட்டாலும் கூட, மீண்டும் அது சுழற்சி முறையில் வந்துவிடாமல் இருப்பதற்கான தயாரிப்பும் அவசியம். எனவே, தடுப்பு மருந்தை விரைவாக உருவாக்கி சோதித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது என Anthony Fauci கூறியுள்ளார்.

தற்போது சீனாவிலும் அமெரிக்காவிலும் தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், பயன்பாட்டுக்கு வர ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டு ஆகலாம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments