கொரோனா பாதிக்கப்பட்டோருக்காக மேற்கு வங்க தொழிலதிபர் உதவி

0 3489

மேற்கு வங்க தொழிலதிபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது 30 சொகுசு பங்களாக்களை அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் நியோடியா என்பவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முன்னணி தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தன்னுடைய 30 பங்களாக்களை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என நியோடியா அறிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்புள்ளவர்களை தனிமைப்படுத்த ஏதுவாக தூய்மைப் பணி மற்றும் உணவு வசதிகளையும் செய்து தருவதாக அவர் கூறியுள்ளார். நியோடியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இதற்கு மேற்கு வங்க அரசு உரிய அனுமதி வழங்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments