பல்லாயிரம் கோடி கி.மீ. அப்பால் காணப்பட்ட ஒளிரும் மேகக்கூட்டம் -நாசா படம் பிடித்து சாதனை

0 10445

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள மேகக்கூட்டத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

உலகின் மிகப் பெரிய விண்ணியல் தொலைநோக்கியான ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இளஞ்சிவப்பு நிற ஒளிரும் மேகக் கூட்டம் ஒன்றைக் கண்டனர்.

இதில் குறிப்பிடப்படும் ஒளி ஆண்டு என்பது, நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் ஒளி பயணிப்பதாகும். இந்த மேகக் கூட்டத்தைச் சுற்றி ஏராளமான நட்சத்திரங்களும், விண்கற்களும் இருந்தன.

இந்த இளஞ்சிவப்பு மேகக் கூட்டத்திற்கு எல் ஹெச் ஏ 120 என் 150 (LHA 120-N 150) என்று பெயரிட்டுள்ளனர். சமீபகாலத்தில் மிக அதிக தொலைவில் நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட மேகக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments