கொசுக்களால் கொரோனா வைரஸ் பரவுமா?

0 6769

கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொசுக்கள் மூலம் டெங்கு போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் பரவிய பாதிப்புக்குள்ளான மக்கள் கொரோனாவும் கொசு மூலம் பரவும் என்று அச்சமடைந்து தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கொசுக்களால் கொரோனா பரவாது என்று உறுதியளித்துள்ளது.

கொரோனா பாதிப்புடைய மனிதர்களால் மட்டுமே அது மற்ற மனிதர்களுக்குப் பரவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டியதில்லை என்றும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டும் பிறருக்கு அது பரவாமல் தடுப்பதற்காக முகக் கவசம் அணியலாம் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் பணிவிடை செய்பவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments