கனஜோராக நடக்கும் கள்ள மது விற்பனை...!நடவடிக்கையை தடுக்கும் கமிஷன்
நாடே கொரோனாவுக்காக முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது.
நாடே கொரோனாவுக்காக முடக்கப்படிருக்கும் நிலையில் தமிழகத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளது.தஞ்சை மாவட்டம்,பேராவூரணி தாலுகாவிற்குட்பட்ட தென்னங்குடி கிராமத்தில் முன்னாள் கவுன்சிலர் ராஜகுமாரி பழனியப்பனின் வீடே மதுக்கடையாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்..!
சட்டவிரோதமாக மதுவிற்பனை கன ஜோராக நடந்து வரும் நிலையில் எத்தனை பாட்டில்கள் வேண்டுமானாலும் அள்ளிக்கொடுக்கிறனர். ஒரு பாட்டிலுக்கு 50 ரூபாய் அதிகம் விலை வைத்து களை கட்டிவருகின்றது இந்த கள்ளமதுவிற்பனை
கொரோனா குறித்த எந்த ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இந்த வீட்டிற்கு வந்து குடிமகன்கள் பாட்டில்களை வாங்கிச்செல்கின்றனர். தடுக்க வேண்டியவர்களுக்கு கமிஷன் சென்று விடுவதால் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகின்றது.
அதே போல 21 நாட்கள் பார்கள் மூடப்பட்டு விட்டதால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அமதுண்ணாகுடி மதுக்கடை பார் உரிமையாளர்கள் தங்கள் வருமானத்திற்காக சட்டவிரோதமாக கருவேலங்காட்டிற்குள் கூலிக்கு ஆள்வைத்து மதுவிற்பனையை நடத்தி வந்தனர்
ஊருக்குள் மதுவாங்க வரும் வெளியூர் நபர்களால் கொரோனா நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறி உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மதுவிற்றவர்களையும் எச்சரித்து விரட்டினர்.மதுவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் வாய்மூடி மவுனியாக இருந்தாலும் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களே தற்போது நேரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது குறிப்பிடதக்கது.
Comments