21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ?
அத்தியாவசிய மருந்துகள் விநியோகம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் மருந்துக் கடைக்காரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மருந்துக் கடைகள் இயங்க அரசு அனுமதித்திருந்தாலும் மருந்துகள் வேகமாக விற்றுத் தீரும் நிலையில் புதிய சரக்குகள் வருவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன.மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர் போக்குவரத்து இல்லாமல் வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதனால் மருந்துகளின் உற்பத்தி கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் விநியோகம் செய்வதற்கான வாகனங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஓட்டுனர்களும் பணிக்கு வராத நிலையில் டெல்லியில் 15 ஆயிரம் மருந்துக் கடைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
நாடு முழுவதும் சிறிய மருந்துக் கடைகளை மூடுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இதனால் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்
Comments