அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி
கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றமும், அதிபர் டிரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கு 2 லட்சம் கோடி டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி எரிக் ஊலேண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் நிதியுதவித் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் உடனடியாக ஒப்புதலைப் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி வேலையின்மையால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கச் சிறு வணிக நிறுவனங்களுக்கு 36 ஆயிரத்து 700 கோடி டாலர் வழங்கப்படும். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு மானியக் கடன் உள்ளிட்ட வகைகளில் ஐம்பதாயிரம் கோடி டாலர் வழங்கப்படும்.
Comments