மருத்துவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் ஓய்வு..!
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி அடிப்படையில், ஒரு வாரம் வரை, அவரவர் வீடுகளில் மருத்துவ கண்காணிப்பில் தங்கி கொள்ள, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு துறையில் 9 பேர் பணியில் இருந்தால், சுழற்சி அடிப்படையில் அதில் 3 பேர் ஓய்வு எடுக்க உத்தரவிட்டுள்ள மருத்துவ கல்வி இயக்குநரகம் , ஓய்வின் போது, மருத்துவர்கள் வெளியில் செல்ல கூடாது என்றும், அவசர காலம் ஏதேனும் நேர்ந்தால், உத்தரவை ஏற்று உடனடியாக பணிக்கு திரும்பும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
Comments