தொழிலாளர்களுக்கு நன்றி காட்டும் ரிலையன்ஸ்

0 3273

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முப்பதாயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் தனது ஊழியர்களுக்கு இருமாத ஊதியத்தை ஒரே மாதத்தில் வழங்க முன்வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிசெய்யாத காலத்துக்கும் ஒப்பந்தத் தொழிலாளர், தற்காலிகத் தொழிலாளர் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ஊழியர்களின் நிதிநெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் முப்பதாயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஒரே மாதத்தில் இரு மாத ஊதியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments