காபூலில் சீக்கிய குருத்வாராவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

0 1771

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாராவுக்குள் புகுந்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகினர்.

காபூலின் சோர் பஜார் பகுதியிலுள்ள (Shor Bazar area of Kabul) குருத்வாராவில் இன்று காலை 4 பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். தகவலின்பேரில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. முடிவில் குருத்வாராவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் ஆப்கானிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எனினும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 8 பேர் காயமடைந்திருப்பதாகவும் காபூலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments